தமிழ்நாடு
உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை ரூ.20,000 ஆக உயர்வு
உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை ரூ.20,000 ஆக உயர்வு
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் வாழ்வு வளம் பெற தமிழக அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாய உறுப்பினராக பதிவு செய்யப்பட்டவர்கள் இயற்கை மரணம் எய்தினால், அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.