தமிழ்நாடு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், மானாவாரி பயிர்கள் செழிக்கும் என்பதால், தாளவாடி மலை கிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், கீரமங்கலம், கீரனூர், திருவரங்குளம், முத்துடையான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் நிலவிய குளுமையான சூழல் காரணமாக, மக்கள் மகிழ்ந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு சுற்றுப்பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது. குறுவை நெல் பயிரிட்டு வாய்க்காலில் தண்ணீருக்காக காத்திருந்து ஏமாந்த விவசாயிகள், போதிய மழையும் இல்லாததால் தவித்துப்போயினர். இந்நிலையில் பெய்த மழையால் அவர்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.