நீலகிரி விவசாயிகளை வாட்டிவதைத்து வரும் உறைபனி

நீலகிரி விவசாயிகளை வாட்டிவதைத்து வரும் உறைபனி
நீலகிரி விவசாயிகளை வாட்டிவதைத்து வரும் உறைபனி

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி தாக்கம் அதிகளவில் காணப்படும். டிசம்பரில் உறைபனி பொழிவு அதிகம் இருக்கும். இச்சமயத்தில் தேயிலை செடிகள், புல்வெளிகள், செடிகொடிகள் கருகும் அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. அங்கு பொதுவாகவே இந்த மாதங்களில் நான்கு டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை செல்லும்.

உதகையில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே உறைபனியின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள், விளைநிலங்கள் மற்றும் புல்வெளிகள் போன்றவை வெள்ளைக் கம்பளம் விரித்ததுபோலக் காட்சியளிக்கிறது. வழக்கத்திற்கு மாறான இந்தக் கடும் குளிரால் எப்போதும் அதிகாலையில் கேரட் அறுவடைக்குச் செல்லும் கூலித் தொழிலாளிகள் உட்பட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 

மேலும் நீலகிரி மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் மலை காய்கறி பயிரான கேரட் அறுவடையில் ஏராளமான கூலிதொழிலாளர்கள் ஈடுபடுவர். இவர்கள் தற்போது 9 மணிக்கு மேல் மட்டுமே கேரட் அறுவடைக்கு செல்கின்றனர். இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக கடும் குளிர் நிலவுவதால் வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள் பகல் நேரத்திலேயே நெருபூட்டி குளிர்காய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உதகையில் பகல் நேரங்களில் அதிக பட்சமாக 18 டிகிரி செல்சியசும்,குறைந்த பட்சமாக 6 டிகிரி செல்சியசும் வெப்ப நிலை காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com