தொடர் மழை: நெல்லையில் நடவுப் பணிகள் மும்மரம்

தொடர் மழை: நெல்லையில் நடவுப் பணிகள் மும்மரம்

தொடர் மழை: நெல்லையில் நடவுப் பணிகள் மும்மரம்
Published on

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் நடவு பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர். 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சில தினங்களுக்கு முன் தொடங்கியது. நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்வதால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் நெல் நடவு பணிகளைத் தொடங்கியுள்ளனர். சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com