தமிழ்நாடு
ட்ராக்டரை ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள்: விவசாயி தற்கொலை
ட்ராக்டரை ஜப்தி செய்த வங்கி அதிகாரிகள்: விவசாயி தற்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வங்கி அதிகாரிகள் ட்ராக்டரை ஜப்தி செய்ததால் விவசாயி தற்கொலை செய்துக்கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன். அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்று விவசாயத்திற்கு ட்ராக்டர் வாங்கியுள்ளார். சில மாதங்களாக முறையாக தவணை கட்டாததால் வங்கி அதிகாரிகள் ட்ராக்டரை ஜப்தி செய்துள்ளனர். இது தொடர்பாக புகார் மனுவை காவல்துறையினர் பெற மறுத்தால் பூச்சிகொல்லி மருந்தை குடித்து வெள்ளியங்கிரிநாதன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.