\
வங்கி ஏஜெண்டுகள் தாக்குதல்: விவசாயி உயிரிழப்பு

வங்கி ஏஜெண்டுகள் தாக்குதல்: விவசாயி உயிரிழப்பு

வங்கி ஏஜெண்டுகள் தாக்குதல்: விவசாயி உயிரிழப்பு
Published on

திருவண்ணாமலை அருகே வங்கி ஏஜெண்டுகள் தாக்கியதில் மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி அருகே உள்ள போந்தையை சேர்ந்த விவசாயி ஞானசேகரன். இவர் இப்பகுதியில்உள்ள வங்கியில் டிராக்டர் வாங்க கடன் வாங்கியுள்ளார். விளைச்சலின்மை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்தாமல் வந்துள்ளார். இந்நிலையில் வங்கி ஏஜெண்டுகள் டிராக்டரை ஜப்தி செய்ய வந்துள்ளனர். அப்போது ஞானசேகரனுக்கும் வங்கி ஏஜெண்டுகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே வங்கி ஏஜெண்டுகள் விவசாயி ஞானசேகரனை தாக்கியுள்ளனர்.இதில் ஞானசேகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com