தொண்டர்களை மிஞ்சிய ரசிகர்கள்: பேனர் வைக்க இடம் பிடிப்பதில் போட்டா போட்டி–துணிவா வாரிசா?

தொண்டர்களை மிஞ்சிய ரசிகர்கள்: பேனர் வைக்க இடம் பிடிப்பதில் போட்டா போட்டி–துணிவா வாரிசா?
தொண்டர்களை மிஞ்சிய ரசிகர்கள்: பேனர் வைக்க இடம் பிடிப்பதில் போட்டா போட்டி–துணிவா வாரிசா?

திரையரங்கில் பேனர் வைப்பதில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே போட்டோ போட்டி நிலவிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் போல் சுவற்றில் இடம் பிடிக்கும் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு, வாரிசு திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் திருத்தணி கோல்டன் திரையரங்கத்தில் வருகின்ற 11 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் சிறப்பு காட்சி வெளியாக உள்ளது.

அதேபோல் அதிகாலை 4 மணிக்கு விஜய்யின் வாரிசு திரைப்படம் சிறப்பு காட்சி வெளியாக உள்ளது. இதனால் கோல்டன் திரையரங்கம் வெளிப்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்க விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சுவற்றில் பெயிண்டால் எழுதியும் காகிதத்தில் எழுதி ஒட்டியும் பிளக்ஸ் பேனர் வைக்க இடம் பிடிக்கின்றனர். சில ரசிகர்கள் இடம் பிடித்த இடத்தில் பேனர்களை வைக்க தொடங்கியுள்ளதால் திரையரங்கு வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

அரசியல் கட்சிகள் தங்களது விளம்பரத்திற்காக சுவர்களில் பெயர் எழுதி வைத்து தங்கள் கட்சித் தலைவர்களின் பெயர்களை எழுதி வைப்பது போன்று நடிகர்களின் ரசிகர்களும் திரையரங்கில் போட்டி போட்டுக் கொண்டு பேனர் வைக்க இடம் பிடித்து வரும் நிகழ்வு திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com