சென்னை: போயஸ் கார்டனில் ரஜினி வீட்டின்முன் குவிந்த ரசிகர்களுடன் பக்கத்துவீட்டு மூதாட்டி வாக்குவாதம்!

தங்களை ஏன் தொடர் தொந்தரவு செய்து வருகிறீர்கள் என்று ரஜினிகாந்த் வீட்டின் முன் குவிந்த ரசிகர்களிடம் மூதாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Rajinikanth
Rajinikanthfile

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்லவும், அவரிடமிருந்து வாழ்த்து பெறவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் அவரது ரசிகர்கள் குவிந்தனர்.

rajinikanth
rajinikanthpt desk

காலை 6:30 மணி முதல் ரசிகர்கள் குவிந்ததால் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் தங்களது வீட்டின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் அருகாமை வீட்டில் குடியிருக்கும் மூதாட்டி ஒருவர், ரசிகர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பண்டிகை காலங்களில் ரசிகர்கள் இங்கு குவிந்து சத்தம் போடுவதால் தங்களுக்கு பெரும் சிரமமாக இருக்கிறது எனவும், இது எங்களுக்கு பண்டிகை நாட்கள் போலவே தெரியவில்லை எனவும் பேசினார்.

வேண்டுமென்றால் வீட்டிற்குள் அழைத்து ரசிகர்களுக்கு வாழ்த்துக் கூறலாமே? எனவும், அதேபோல வீட்டிற்குள் சென்று வாழ்த்து பெறுங்கள் எங்களை ஏன் தொடர் தொந்தரவு செய்து வருகிறீர்கள் எனவும் அந்த மூதாட்டி கோபத்துடன் பேசிவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com