\
தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ - ‘ஃபனி’ புயல் எச்சரிக்கை

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ - ‘ஃபனி’ புயல் எச்சரிக்கை

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ - ‘ஃபனி’ புயல் எச்சரிக்கை
Published on

தமிழகத்தில் வரும் 30 மற்றும் மே 1ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றுழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெறக்கூடும். 

மேலும், இது 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று, தற்போதைய நிலவரப்படி வடதமிழக கடற்கரை பகுதியையொட்டி நகரக்கூடும். இதனால் மீனவர்கள் இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், 27, 28 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார். வங்கக் கடலில் 29ஆம் தேதி உருவாகவுள்ள அந்தப் புயலுக்கு ‘ஃபனி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com