பேரனுடன் சேர்ந்து ‘டிக்டாக்’ வீடியோவில் பட்டையை கிளப்பும் பாட்டி

பேரனுடன் சேர்ந்து ‘டிக்டாக்’ வீடியோவில் பட்டையை கிளப்பும் பாட்டி

பேரனுடன் சேர்ந்து ‘டிக்டாக்’ வீடியோவில் பட்டையை கிளப்பும் பாட்டி
Published on

அசத்தலான முக பாவனை, கனக்கச்சிதமான நடிப்பு என  ‘டிக்டாக்’ வீடியோவில் பாட்டியும், பேரனும் ஒன்றாக சேர்ந்து அசத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் இப்போது பலருக்கு பொழுதுபோக்காக இருப்பது ‘டிக்டாக்’ வீடியோக்கள்தான். சிலர் ‘டிக்டாக்’வீடியோ செய்வதில் மூழ்கிக் கிடக்கின்றனர். சிலரோ, மற்றவர்களின் ‘டிக்டாக்’ வீடியோக்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். இப்படிப்பட்ட ‘டிக்டாக்’ வீடியோ எடுப்பதற்கு பலரும் பல்வேறு சிரமங்கள் எடுக்கின்றனர். தங்களது வீடியோக்கள் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக, நிஜ படத்தை விட ‘டிக்டாக்’ வீடியோக்களில் துல்லியமாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் அசத்தலான முக பாவனை, கனக்கச்சிதமான நடிப்பு என ‘டிக்டாக்’ வீடியோவில் பாட்டியும், பேரனும் ஒன்றாக சேர்ந்து அசத்தி வருகின்றனர். பேரனான அக்ஷய் பார்த்தா மற்றும் அவரது பாட்டியின் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்த வயதிலும், பேரனுடன் இணைந்துக் கொண்டு இன்றைய பாடலுக்கு ஏற்ற வகையில் பாட்டி துல்லியமாக செய்யும் முக பாவனை, வீடியோக்களை பார்க்கும் பலரை ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. ஹிந்தி, தமிழ் பாடலுக்கு ‘டிக்டாக்’ செய்யும் இவர்களுக்கு ரசிர்கள் பட்டாளம் ஏரளாம். வீடியோக்களுக்க கிடைக்கும் லைக்குகளும் அபரிமிதம். இவர்களின் வீடியோக்கள் பலவற்றையும் சமூக வலைத்தளவாசிகள் தங்களது பக்கத்தில் ரசனையுடன் ஷேர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com