பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான கண. சிற்சபேசன் காலமானார்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான கண. சிற்சபேசன் காலமானார்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான கண. சிற்சபேசன் காலமானார்
Published on

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான கண. சிற்சபேசன் வயது முப்பால் சென்னையில் காலமானார்.

பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான கண. சிற்சபேசன் (வயது 88) உடல்நலக்குறைவால் சென்னை திருவொற்றியூரில் காலமானார். 1934ம் ஆண்டில் தேவகோட்டையில் பிறந்த கண. சிற்சபேசன், தமிழ் ஆசிரியராக அரசுப்பள்ளியில் பணியாற்றினார். சென்னை திருவான்மியூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியபோது நீதிபதி ஏ.ஆர் லட்சுமனன், சாலமன் பாப்பையா, முன்னாள் அமைச்சர்கள் காளிமுத்து, தமிழ் குடிமகன்  ஆகியோர் இவரது மாணவர்களாக திகழ்ந்தனர்.



சிறந்த நகைச்சுவை பேச்சாளராகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய கண. சிற்சபேசனுக்கு கிருபானந்த வாரியார் "நகைச்சுவை இமயம்" எனும் பட்டம் அளித்தார். மேலும் தமிழ் பட்டிமன்ற மரபின் முதன்மையாக விளங்கிய கண. சிற்சபேசன் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா தோன்றுவதற்கு முன்னோடியாக விளங்கினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர்.

கண. சிற்சபேசன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். இவருக்கு 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கம்பன் விருது கொடுக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கு திருவொற்றியூரில் உள்ள  மின்மயானத்தில் நாளை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com