தமிழ்நாடு
சென்னையில் தேடப்பட்டு வந்த ரவுடி போலீசில் சரண்
சென்னையில் தேடப்பட்டு வந்த ரவுடி போலீசில் சரண்
சென்னையில் தேடப்பட்டு வந்த ரவுடி, பழைய சரித்திர பதிவேடு குற்றவாளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பழைய கொலை முயற்சி வழக்கு ஒன்றிற்காக ரவுடி நாகூர் மீரான் என்பவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இவர் மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆதம்பாக்கம், பரங்கிமலை, கே.கே.நகர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
தென்சென்னையில் கடந்த 10 வருடங்களாக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளி காவல்நிலையத்தில் நாகூர் மீரான் சரணடைந்தார்.