பிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல்
சென்னையில் பிரபல கஞ்சா வியாபாரியை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் புஷ்பவல்லி (39) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புஷ்பவள்ளி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து புஷ்பவள்ளி மற்றும் அவரது மகன் பவுல் (19) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3,000, மற்றும் 13 செல்போன்கள், 4 அரிவாள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துணையர் முத்துசாரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வளர் திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.