\
குடும்பப் பிரச்னை: இரண்டு மகன்களுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு – சிகிச்சையில் கணவர்

குடும்பப் பிரச்னை: இரண்டு மகன்களுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு – சிகிச்சையில் கணவர்

குடும்பப் பிரச்னை: இரண்டு மகன்களுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு – சிகிச்சையில் கணவர்
Published on

அலங்காநல்லூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. மனைவி, மகன் உட்பட மூவர் உயிரிழந்த நிலையில், கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (40) கட்டட வேலை பார்த்து வரும் இவர் மனைவி தனலெட்சுமி (36) மற்றும் ஹரி கிருஷ்ணன், (14), குபேர கிருஷ்ணன் (12), ஆகிய இரு மகன்களுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அய்யனார் சரிவர வேலைக்குச் செல்லாமலலும் சம்பள பணத்தை மனைவியிடம் தராமலும் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது மனைவி தனலெட்சுமி, மகன்களான ஹரி கிருஷ்ணன், குபேர கிருஷ்ணன் ஆகிய மூவரும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் கணவர் அய்யனார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மூவரும் விஷம் குடித்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரும் மனமுடைந்து விஷம் குடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை மீட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தில் தாய், மகன்கள் உட்பட மூவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com