சாப்பிடக்கூட வழியில்லை: கந்துவட்டிக் கொடுமையால் தவிக்கும் குடும்பம்..!

சாப்பிடக்கூட வழியில்லை: கந்துவட்டிக் கொடுமையால் தவிக்கும் குடும்பம்..!

சாப்பிடக்கூட வழியில்லை: கந்துவட்டிக் கொடுமையால் தவிக்கும் குடும்பம்..!
Published on

பல மடங்கு வட்டியுடன் பணத்தை செலுத்தியும் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவிக்கும் ஒரு குடும்பம், காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கிறது.

கோவையை அடுத்த சிஎம்சி காலனி பகுதியை சேர்ந்தவர் பண்ணாரி. துப்புரவுப் பணி செய்து வருபவர். இவர் குடும்பத் தேவைக்காக 30,000 ரூபாய் கடன் பெற்று உள்ளார். கடன் பெரும் பொழுதே 3,000 ரூபாய் வட்டி பிடித்த பிறகு 27,000 ரூபாயை மட்டுமே கொடுத்து உள்ளனர். அதன் பின்னர் இவரது ஏடிஎம் கார்டை வைத்துக்கொண்டு ஊதிய பணத்தை எடுத்துக்கொள்வதே கந்துவட்டி கும்பலின் வேலையாக இருந்து வருகிறது.

வாங்கிய 30,000 ரூபாய் கடனுக்கு பல மடங்கு வட்டியுடன் 50,000 ரூபாய் பணத்தை திருப்பி செலுத்தியும், மேலும் 16,000 ரூபாய் கட்ட வேண்டும் அந்த கந்துவட்டி கும்பல் கூறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பண்ணாரி, காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் காவல்துறை தரப்பில் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, வங்கிகளில் தங்களுக்கு கடனுதவி அளித்தால் இதுபோன்ற பலரிடம் கந்துவட்டிக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இதற்கு அரசு முன் வந்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில் துவங்குவதற்கு கடனுதவி வழங்க வேண்டும் என  பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர். எந்த பொருளாதார பின்புலமும் இல்லாமல், தினந்தோறும் வாழ்வதே பெரும் போராட்டமாக உள்ளதாக வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com