எண்ணெய் விளக்கொளியில் படிப்பு: குமரியில் 30 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு போராடும் குடும்பம்

எண்ணெய் விளக்கொளியில் படிப்பு: குமரியில் 30 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு போராடும் குடும்பம்
எண்ணெய் விளக்கொளியில் படிப்பு: குமரியில் 30 ஆண்டுகளாக மின் இணைப்புக்கு போராடும் குடும்பம்

மின்மிகை மாநிலம் என்றும், மின்சாரம் இல்லாத இடமே இல்லை என்றும் தமிழகம் சொல்லப்படும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மருதூர்குறிச்சியில் கடந்த 30 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழ்ந்து வருகிறது ஒரு குடும்பம்.

இருளுக்குள் ஒளிர்கின்றன மண்ணெண்ணெய் விளக்குகள்... இந்த விளக்கு வெளிச்சத்தில்தான் இந்த வீட்டு பெண்கள் சமைக்கிறார்கள். படிக்கிறார்கள். அத்தனை வேலையையும் செய்கிறார்கள். மருதூர்குறிச்சியில் தென்னை ஏறும் தொழிலாளியான பிரான்சிஸ் - அமலபுஷ்பம் தம்பதியின் வீடு இது. இவர்களின் 7 மகள்கள், வயதான தாய் என அத்தனை பேரும் கடந்த 30 ஆண்டுகளாக இந்த வீட்டில் மின்சாரம் இன்றிதான் காலத்தை கழித்துவருகிறார்கள்.

இந்த மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலேயே 7 பெண்களும் முதுகலை பட்டம்வரை படித்துள்ளனர். இவர்களில் 4 பெண்களுக்கு திருமணமாகிவிட்டநிலையில் இன்னும் 3 பெண்கள், மண்ணெண்ணெய் விளக்கிலேயே போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்கள்.

ரப்பர் மரங்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குச் செல்ல சாலையில் இருந்து 200-மீட்டர் தூரத்திற்கு ஒற்றையடி பாதையில் செல்ல வேண்டியிருப்பதாலும், சாலைக்கும், வீட்டுக்குமான தொலைவாலும் மின்இணைப்பு வழங்கப்படுவது இன்றுவரை தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. இனிவரும் காலத்திலாவது வீட்டுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படுமா என்று இருட்டுக்குள் காத்திருக்கிறது இந்தக் குடும்பம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com