கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: கார் மீது மரம் விழுந்து விபத்து..!

கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: கார் மீது மரம் விழுந்து விபத்து..!
கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: கார் மீது மரம் விழுந்து விபத்து..!

விருத்தாசலத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிய குடும்பம் புளியமரம் விழுந்ததில் காயமடைந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஆலங்குடி குரு பகவான் கோயிலுக்கு, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த இளங்கோவன் (47), அவரது அண்ணன் பரமசிவம் (67) ஆகியோர் குடும்பத்துடன் காரில் சென்றனர். குருபெயர்ச்சியை முன்னிட்டு இந்த ஆன்மிகப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய அவர்கள், கோமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்தது. 

இதில் காரில் இருந்த பரமசிவம் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். காரில் இருந்த மற்ற 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விபத்தில் காயமடைந்த பரமசிவத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் கார் மீது கிடந்த புளியமரத்தை தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com