குடும்பத் தகராறு: 5 வயது மகனுடன் தாய் தற்கொலை

குடும்பத் தகராறு: 5 வயது மகனுடன் தாய் தற்கொலை
குடும்பத் தகராறு: 5 வயது மகனுடன் தாய் தற்கொலை

நாமக்கல்லில் குடும்பத் தகராறு காரணமாக தாய் தனது 5 வயது மகனுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ராசிபுரம் சிவானந்தா சாலை பகுதியைச் சேர்ந்த அம்சா என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் தீபக் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் அடிக்கடி கார்த்திக் குடித்துவிட்டு குடும்பத்தில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கம்போல் நேற்றும் குடித்துவிட்டு கார்த்திக் தகராரில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அம்சா, விஷ மாத்திரை வாங்கி வந்து தனது மகன் தீபக்கிற்கும் கொடுத்துவிட்டு தானும் உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com