தமிழ்நாடு
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: நோய் பாதிப்பால் விபரீத முடிவு!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: நோய் பாதிப்பால் விபரீத முடிவு!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்தனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சிவந்திபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக குடும்பத்துடன் அவர் சிவந்திபுரம் வந்ததாகக் கூறப்படுகிறது. நோய் முற்றிவிட்டதை அறிந்த மணிகண்டன் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில் மகேந்திரன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்துள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் விஷம் குடித்தும், மகேந்திரன் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

