வேலூர் | சாலை விபத்தில் உயிரிழந்த மகன்... உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பத்தினர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.

வேலூர் மாவட்டம் கொள்ளக்கோட்டை பகுதியை சேர்ந்த செளந்தரராஜன் - தனலட்சுமி தம்பதியர்களின் இளைய மகனான சந்தோஷ், இருசக்கர வாகனத்தில் சென்ற போது ராணிபேட்டை மாவட்டம் நாராயண குப்பன் அருகே விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவன் உயிரிழப்பு
சிறுவன் உயிரிழப்பு

இதையடுத்து உயிரிழந்த சந்தோஷின் உடலில் உள்ள இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள MGM மருத்துவமனைக்கும், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை ராணிப்பேட்டை CMC மருத்துவமனைக்கும் தானமாக
குடும்பத்தினர் வழங்கினர். பெற்றோரின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் உறுப்புகளை தானம்
“அவங்க குடும்பத்துல ஒருத்தரை போல என்னையும் பாத்துப்பார்”- விஜயகாந்த்தின் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com