புதிய குடும்ப அட்டை வழங்க 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கொல்லிமலை வட்ட வழங்கல் அலுவலரும், வருவாய் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழவந்திநாடை சேர்ந்த சண்முகம் என்பவர், தனது உறவினருக்கு குடும்ப அட்டை வாங்குவதற்காக கொல்லிமலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார். அதனை பரிசீலனை செய்த வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இது குறித்து லஞ்சம் ஒழிப்புத்துறையினரிடம் சண்முகம் புகார் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அரசு அதிகாரிகளிடம் சண்முகம் அளித்துள்ளார். அப்போது, அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.