கைது செய்யப்பட்ட அபி பிரபா
கைது செய்யப்பட்ட அபி பிரபாpt web

காதலனின் பெற்றோரை நம்பவைக்க எஸ்.ஐ நாடகம்... இளம்பெண் அதிரடி கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலனை திருமணம் செய்வதற்காக எஸ்.ஐ. என நாடகமாடிய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
Published on

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபி பிரபா. 34 வயதான இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சிவாவின் வீட்டில் அரசுப் பணியில் இருக்கும் பெண்தான் வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துவதாக காதலியிடம் தெரிவித்துள்ளார். இதனால் காதலனின் பெற்றோரை நம்பவைப்பதற்காக இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர்.

எஸ்.ஐ-க்கான சீருடைகளை தைத்து போட்டுக் கொண்டு அந்த பகுதியில் அபி வலம் வந்துள்ளார். சிவாவின் நண்பர்களுடன் எஸ்.ஐ-க்கான சீருடையை அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது குறித்து தெரியவந்த நிலையில் காவல்துறையினர் அபி பிரபாவை அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com