\
போலீஸ் என கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தவருக்கு தர்ம அடி

போலீஸ் என கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தவருக்கு தர்ம அடி

போலீஸ் என கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தவருக்கு தர்ம அடி
Published on: 

ஈரோடு மாவட்டம் பவானியில் போலீஸ் என கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த ஊர்க்காவல் படையை சேர்ந்தவரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் நிலையத்தில் ஊர்க்காவல்படை பிரிவில் கருணாநிதி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள மேட்டூர் சாலையில் மூன்று ரோடு என்ற இடத்தில் வானத்தில் செல்பவர்களிடம் தன்னை போலீஸ் என்று கூறி பணம் கேட்டுள்ளார். 

அப்போது அப்பகுதியில் இருப்பவர்கள் சந்தேகமடைந்து கருணாநிதியிடம் விசாரித்த போது அவர் முறையாக பதில் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அவர் போலீஸ் இல்லையென்று தெரியவந்ததையடுத்து பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி காவல் நிலைய போலீசார் ஊர்க்காவல் படையை சேர்ந்த கருணாநிதியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் கருணாநிதி போலியான, அடையாள அட்டையை பயன்படுத்தி வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த போலியான அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com