\
கள்ளநோட்டு அச்சடித்த தியாகியின் மகன்!

கள்ளநோட்டு அச்சடித்த தியாகியின் மகன்!

கள்ளநோட்டு அச்சடித்த தியாகியின் மகன்!
Published on: 

கள்ளநோட்டு தயாரித்த தியாகியின் மகன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் காரில் வந்த ஒரு பெண் உள்பட 3 பேர் அங்குள்ள கடைகளில் 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிவிட்டு, 500 ரூபாயை கொடுத்தனர். கடைக்காரர் நோட்டை பார்த்ததும் சந்தேகம். உடனே அவர்கள் மீதியை வாங்காமல் அங்கிருந்து நழுவினர். ஆனால் கடைக்காரர் மற்றும் சிலர் அவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் திருச்சியை சேர்ந்த அப்துல் சுக்கூர், அவர் மனைவி ஹசீனாபானு, கார் டிரைவர் சையது காசிம் என்பது தெரிய வந்தது. அவர்கள் தங்கள் வீட்டில் புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு பிரின்டர்,

ரூபாய் நோட்டுகளின் நடுவில் ஒட்டப்படும் பேப்பர், கள்ளநோட்டுகளை தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் இருந்தன. மேலும், ஒரு பையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருந்தன. போலீசார் அதை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

அப்துல் சுக்கூரின் தந்தை சையதுமுகமது சுதந்திர போராட்ட தியாகி. பல ஆண்டுகளாக தனது மகனுடன் அவர் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com