போலி எம்-சாண்ட்’ மணல் - மோசடி நிறுவனத்திற்கு சீல்

போலி எம்-சாண்ட்’ மணல் - மோசடி நிறுவனத்திற்கு சீல்

போலி எம்-சாண்ட்’ மணல் - மோசடி நிறுவனத்திற்கு சீல்
Published on

திண்டுக்கல்லில் போலி எம்-சாண்ட் மணல் தயாரித்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 

திண்டுக்கல் அருகே உள்ளது செல்லமந்தாடி கிராமத்தின் அருகே சந்தனவர்த்தினி ஆறு செல்கிறது. ஆற்றின் அருகே அரசு அனுமதி இல்லாமல் கட்டமாயன் என்பவர் போலியான மற்றும் தரமற்ற எம்சாண்ட் மணல் தயாரித்து விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் அரசு அனுமதி இல்லாமல் சந்தனவர்த்தினி ஆற்றிலிருந்து மணல் எடுத்து விற்பனை செய்வதாகவும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் பழனி சார்பு ஆட்சியர் அருள்ராஜ் தலைமையில் வேடசந்தூர் தாசில்தார் மற்றும் கனிமவளத் துறை அதிகாரி உட்பட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று மாலை மணல் குவாரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு போலியான எம்-சாண்ட் மணல் தயாரிப்பது தெரியவந்தது. மேலும் அரசு அனுமதி இல்லாமல் சந்தனவர்த்தினி ஆற்றிலிருந்து மணல் எடுப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து பழனி சார் ஆட்சியர் உத்தரவின்பேரில், போலியான எம்-சாண்ட் மணல் தயாரிக்கும் இயந்திரத்திற்கும், ஜெனரேட்டர் அறைக்கும் சீல் வைக்கப்பட்டது. அத்துடன் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி எந்திரம் மற்றும் லாரிகள் ஆகியவற்றை திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். போலி எம்சாண்ட் மணல் தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கட்டமாயனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com