பிளஸ்டூ படித்துவிட்டு மருத்துவம் : போலி பெண் மருத்துவர் கைது

பிளஸ்டூ படித்துவிட்டு மருத்துவம் : போலி பெண் மருத்துவர் கைது
பிளஸ்டூ படித்துவிட்டு மருத்துவம் : போலி பெண் மருத்துவர் கைது

பிளஸ்டூ படித்து விட்டு திருத்தணியில் சொந்தமாக கிளினிக் வைத்து மருத்துவரகாக பணியாற்றி வந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து, ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலுக்கு போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதால் தான், காய்ச்சல் தீவிரமடைந்து உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில், போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் தயாளன் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக இன்று திருத்தணி அமிர்தாபுரம் திருவள்ளுவர் நகரில் செயல்ப்பட்டு வந்த மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர்(காசநோய்) லட்சுமி தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர். 

இதில், வேளாங்கண்ணி(43) என்ற பெண் பிளஸ்டு முடித்து லேப் டெக்னிஷியன் பயிற்சி பெற்று, கிளினிக் வைத்ததும், மூன்று ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலி பெண் மருத்துவர் வேளாங்கண்ணியை சுகாதாரத் துறையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

திருத்தணி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 30 நாள்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com