மாங்காட்டில் போலி பெண் மருத்துவர் ஒருவரை சுகாதாரத்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முழு வீச்சில் இறங்கி உள்ள சுகாதாரத்துறையினர் பல இடங்களில் போலி மருத்துவர்களையும் கண்டுப்பிடித்து வருகிறனர். இந்நிலையில் மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட சாதிக் நகர் பகுதியில் சந்திரகலா என்ற பெண், டாக்டருக்கு படிக்காமல் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலி மருத்துவர் எனத் தெரிய வந்தது. இவர், பொதுமக்களுக்கு ஊசி, குளுக்கோஸ், தடுப்பு ஊசிகள் போன்றவற்றை பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாங்காடு போலீசார் அவரை கைது செய்தனர்.