\
கண்டெய்னர்களில் கள்ளநோட்டு கடத்தலா?: சென்னை துறைமுகத்தில் தீவிர சோதனை

கண்டெய்னர்களில் கள்ளநோட்டு கடத்தலா?: சென்னை துறைமுகத்தில் தீவிர சோதனை

கண்டெய்னர்களில் கள்ளநோட்டு கடத்தலா?: சென்னை துறைமுகத்தில் தீவிர சோதனை
Published on: 

கப்பல் மூலம் வெளிநாட்டிலிருந்து கள்ளநோட்டுகள் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கண்டெய்னர்களில் நடத்தப்படும் சோதனை குறித்து அதிகாரிகள் இதுவரை தகவல் அளிக்கவில்லை. கள்ளநோட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால், சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர்கள் வெளியே செல்லாமல் தடுத்து, நேற்று இரவு முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆயிரத்திற்கும் அதிகமான கண்டெய்னர்கள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், துறைமுகத்திற்கு வர வேண்டிய கண்டெய்னர்களும் மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com