சென்னை: தங்கக் காசுகள் எனக் கூறி பித்தளை காசுகளை விற்று ரூ.30 லட்சம் மோசடி

சென்னை: தங்கக் காசுகள் எனக் கூறி பித்தளை காசுகளை விற்று ரூ.30 லட்சம் மோசடி
சென்னை: தங்கக் காசுகள் எனக் கூறி பித்தளை காசுகளை விற்று ரூ.30 லட்சம் மோசடி

(கோப்பு புகைப்படம்)

தங்க காசுகள் எனக்கூறி பித்தளை காசுகள் கொடுத்து, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை சவுகார்பேட்டை தங்கசாலைப் பகுதியை சேர்ந்தவர் ஜீத்மல் (74). இவர் சவுகார்ப்பேட்டை காசி செட்டி தெருவில் பை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஜீத்மலுக்கு பழக்கமான நபர் ஒருவர் கடையில் அணுகி, தன்னிடம் ஒரு கிராம் எடையுள்ள 4 தங்கக் காசுகள் இருப்பதாகவும், அதை வைத்து வெறும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் எனத் தெரிவித்துள்ளார். தங்கக் காசுகளை சோதனையிட்டபோது நிஜமானதாக இருந்ததால் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து தங்கக்காசுகளை ஜீத்மல் வாங்கினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அதே நபர் ஜீத்மலை அணுகி தன்னிடம் 4 கிலோ தங்கக் காசுகள் இருப்பதாகவும், அதை பெற்றுக்கொண்டு முதலில் 90 லட்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய ஜீத்மல் தனது மகனான சுரேஷிடம் அனுப்பி அவ்வளவு பணம் இல்லையென கூறி அந்த நபரை அனுப்பிவிட்டார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் நாராயண முரளி தெருவில் சுரேஷை அணுகிய அதே நபர், தங்கக் காசுகளை வாங்கி கொள்ளுமாறு கேட்டப்போது, தன்னிடம் 30 லட்சம் மட்டுமே இருப்பதாக சுரேஷ் தெரிவித்துள்ளார். 30 லட்சம் ரூபாய்க்கு 2.5 கிலோ தங்க காசுகள் மட்டுமே கிடைக்கும் என அடையாளம் தெரியாத நபர் கூறியதை நம்பி, அயனாவரம் குன்னூர் சாலை, தாதாவாடி அருகே 2.5 கிலோ தங்கக் காசுகளை கொடுத்துவிட்டு சுரேஷிடம் இருந்து 30 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற ரமேஷ் 2.5 கிலோ தங்கக் காசுகளை சோதனை செய்தபோது, அந்தக் காசுகள் அனைத்தும் பித்தளை காசுகள் என தெரியவந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ரமேஷ் மோசடி நபர் குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பித்தளை காசுகளை கொடுத்து மோசடி செய்த அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com