\
”கடந்த தேர்தலில் பணம் கொடுத்தும் தோல்வி” - அதிமுக முன்னாள் துணை மேயர் சர்ச்சை பேச்சு

”கடந்த தேர்தலில் பணம் கொடுத்தும் தோல்வி” - அதிமுக முன்னாள் துணை மேயர் சர்ச்சை பேச்சு

”கடந்த தேர்தலில் பணம் கொடுத்தும் தோல்வி” - அதிமுக முன்னாள் துணை மேயர் சர்ச்சை பேச்சு
Published on

ஈரோட்டில் அதிமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் "கடந்த தேர்தல்களில் பணம் கொடுத்தும் தோற்று போயுள்ளோம்" என முன்னாள் துணை மேயர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

இதில், அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் பேசிய முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, “கடந்த தேர்தலில் 1000 ரூபாய் கொடுத்தும் தோல்வி அடைந்துள்ளோம் எனவும் பாராளுமன்ற தேர்தலில் 200 ரூபாய் கொடுத்தும் அவர்களே வெற்றி பெற்றனர். தேர்தலில் பணம் பெரிதல்ல. வேட்பாளரும் அவரின் பணியுமே பெரிது” என அவர் பேசியது பேசுபொருளாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com