இந்தியா போஸ்ட் வங்கி மூலம் ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் வாழ்வறி சான்றிதழ் அளிக்கும் சேவை

இந்தியா போஸ்ட் வங்கி மூலம் ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் வாழ்வறி சான்றிதழ் அளிக்கும் சேவை
இந்தியா போஸ்ட் வங்கி மூலம் ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் வாழ்வறி சான்றிதழ் அளிக்கும் சேவை

பயோமெட்ரிக் அடிப்படையிலான டிஜிட்டல் வாழ்வறி சான்றிதழ் அளிக்கும் சேவையை இந்தியா போஸ்ட் வங்கி மூலம் ஓய்வூதியர்களுக்கு அஞ்சல் துறை வழங்குகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சல் ஊழியர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சல் சேவகர்கள் மூலம் குறைந்த கட்டணத்துடன் இந்த சேவை ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த சேவை மூத்தக் குடிமக்கள் பயணம் செய்வதையும் வங்கிகளுக்கு அல்லது அலுவலகங்களுக்கு செல்வதையும் தவிர்க்க உதவுகிறது.

சென்னை  நகர வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த சேவை கிடைக்கிறது. அஞ்சல் தகவல் செயலி அல்லது http://ccc.cept.gov.in/covid/request.aspx என்ற இணையதளம் மூலம் வீடு தேடி சேவைக்கான வேண்டுகோளை அனுப்பலாம். ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையிலான வாழ்வறி சான்றிதழுக்கு விண்ணப்பிக்க http://jeevanpramaan.gov.in/ppouser/login என்ற இணையதள இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை நகர வடக்கு மண்டல அஞ்சலகங்களின் முதுநிலை மேற்பார்வையாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தகவல் : PIB 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com