\
கொலையில் முடிந்த பேஸ்புக் நட்பு: தீயணைப்பு வீரர் கைது

கொலையில் முடிந்த பேஸ்புக் நட்பு: தீயணைப்பு வீரர் கைது

கொலையில் முடிந்த பேஸ்புக் நட்பு: தீயணைப்பு வீரர் கைது
Published on

சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தீயணைப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் நிவேதிதா. ஆசிரியை. கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வாழும் இவர், ஸ்ரீபெரும்புதுரில் பணிபுரியும் தனது மகளை பார்ப்பதற்காகச் சென்னை வந்துள்ளார். இந்நிலையில், தனது முகநூல் நண்பரான கணபதியுடன் அண்ணா நகர் பகுதியில் நிவேதிதா பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அதனை பார்த்து ஆத்திரமடைந்த நிவேதிதாவின் மற்றொரு முகநூல் நண்பரான இளையராஜா, ஆசிரியை நிவேதிதா மீது காரை ஏற்றி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்ததுடன், இளையராஜாவையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கணபதி என்பவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளையராஜா தீயணைப்புப் படையில் பணிபுரிந்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com