தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஆபத்து

தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஆபத்து
தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஆபத்து

தொடர்ந்து கம்ப்யூட்டர் ஒளியில் வேலை செய்வது கண் பார்வைக்கு உகந்ததல்ல என்றும் அதனால் பல பாதிப்புகள் வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

இரண்டு வயது குழந்தைகள் தொடங்கி எண்பது வயது முதியவர் வரை கேட்ஜட்களின் துணையின்றி இருப்பதில்லை. லேப் டாப், டேப்லட், ஆன்ட்ராய்டு போன், கம்ப்யூட்டர் என பல வடிவங்களில் கேட்ஜட்டுகள் நம் வாழ்க்கையோடு இணைந்து இருக்கின்றன. எந்த அளவுக்கு இவை வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளதோ அதே அளவுக்குப் பிரச்னைகளையும் கூட்டி கொண்டு வந்திருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 

மணிக்கணக்காக உட்கார்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி இமைப்பதையே மறந்துவிடுகிறார்கள். எனவே அவர்களின் கண்களில் ஈரத்தன்மை குறைந்து போய்விடுகிறது. அதனால் பல பாதிப்புகளை பிற்காலங்களில் சந்திக்கக் கூடும். ஆகவே வேலைக்கு தக்க கண்களுக்கு ஓய்வு, அதோடு அடிக்கடி மறக்காமல் இமைப்பது நல்லது என்று கூறும் மருத்துவர்கள் குழந்தைகள் விளையாட்டுக்காக பயன்படுத்தும் கேட்ஜெட்களிலும் இந்தப் பாதிப்புகள் வரக்கூடும் என்றும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோமை தவிர்ப்பது நல்லது என்றும் குறைந்தது 20 நிமிடம் வேலைக்கு நடுவே இடைவேளை தேவை என்றும் குறிப்பிடுகிறார்கள். 
 
கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு கண்களில் வறட்சி, கவனச்சிதறல் குறைபாடு போன்ற பல பிரச்னைகளுக்கு காரணமாகும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள். கண்களை பாதுகாப்பதன் மூலம் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமை தவிர்க்கலாம் என்பது நிபுணர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com