\
கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு - சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி

கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு - சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி

கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு - சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி
Published on: 

தமிழகத்தில் சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வுகளை அளித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, கடந்த ஓராண்டாகவே தடை விதிக்கப்பட்டிருந்த சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு நாளை (மார்ச் 3) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர்வரை பங்கேற்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர்வரை பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்ட இதர கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com