\
தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்..!

தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்..!

தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்..!
Published on

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் தனியார் பேருந்துகள் விதிகளை மீறி கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க 8 குழுக்களை அரசு அமைத்துள்ளது.

அந்த குழுக்கள், கோயம்பேடு, ஊரப்பாக்கம், ஸ்ரீபெரும்பதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் என்றும் விதிகளை மீறும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விதிகளை மீறும் தனியார் பேருந்துகள் குறித்து பொதுமக்களும் 1800 425 6151 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதுவரை பயணிகளிடம் இருந்து 2 புகார் வந்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com