\
நீட் தேர்வு: நெல்லை, தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளத்திற்கு இன்று இரவு கூடுதல் பேருந்துகள்

நீட் தேர்வு: நெல்லை, தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளத்திற்கு இன்று இரவு கூடுதல் பேருந்துகள்

நீட் தேர்வு: நெல்லை, தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளத்திற்கு இன்று இரவு கூடுதல் பேருந்துகள்
Published on

நீட் தேர்வையொட்டி தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளத்திற்கு இன்று இரவு கூடுதல் பேருந்து இயக்கப்படும் என்று தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இரவு 8.05க்கு இந்தப் பேருந்து புறப்படுகிறது. தற்போது இருக்கைக்களுக்கான முன் பதிவு துவங்கியுள்ளது. 

அதேபோல், நெல்லையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் மாணவர்களுக்காக மூன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மே 6ம் தேதி வரை கூடுதல் பேருந்து சேவை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். 

இதனிடையே, ‘கேரளாவில் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் பதற்றமடைய வேண்டாம்: கேரளாவில் தேர்வு எழுதினாலும் தமிழில் வினாத்தாள் வழங்கப்படும். மே 6ல் காலை 7.30 மணிக்கே மையங்களுக்கு வந்து கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கவும்’ என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com