தமிழக மீனவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை கடற்படையின் செயல் கொடூரமானது, சட்ட விரோதமானது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பலம் வாய்ந்த இந்திய கடற்படை கடலோர காவல்படை வீரர்கள் இருந்தும் இந்தப் படுகொலை நடந்திருப்பது வேதனை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தமிழர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்பதே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.