\
விளைநிலங்கள் வீட்டு மனையாக தடை நீடிப்பு

விளைநிலங்கள் வீட்டு மனையாக தடை நீடிப்பு

விளைநிலங்கள் வீட்டு மனையாக தடை நீடிப்பு
Published on

அங்கீகரிக்கப்படாத நிலங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பதாகவும், வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். இந்த தடையால் வீடு, மனை வாங்குவோர் விற்போர் பாதிக்கப்படுவது குறித்து தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com