தமிழ்நாடு
அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு
அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு
உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வருவதால் பேரறிவாளன் பரோலை மேலும் ஒருமாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பாக பல சர்ச்சைகள் எழும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பேரறிவாளனுக்கு பலமுறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரோலில் இருக்கும் பேரறிவாளன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதை ஏற்று பேரறிவாளன் பரோலை மேலும் ஒருமாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.