\
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு
Published on: 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் தீவிர பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. பின்னர் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகள் மெல்ல மெல்ல அறிவிக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா தாக்கம் முழுமையாக குறையாததால், தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த மாதத்திற்கான கொரோனா தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

இந்நிலையில், இன்றுடன் மார்ச் மாதத்திற்கான கட்டுப்பாடுகள் நிறைவடையும் நிலையில் மீண்டும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம் எனவும் கொரோனா விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com