மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின் வாரியம் கொடுத்த விளக்கம்

மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின் வாரியம் கொடுத்த விளக்கம்
மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின் வாரியம் கொடுத்த விளக்கம்

மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விளக்கங்களை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 37 லட்சம் வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில் ஒரு கோடி நுகர்வோருக்கு அதாவது 42 புள்ளி 19 சதவிகிதம் நுகர்வோருக்கு மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும், 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும், குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

வீட்டு மின் நுகர்வோருக்கு நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதால் 2 கோடியே 37 லட்சம் மின் நுகர்வோர் பயன் அடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் ஆகிய மின் கட்டண பிரிவுக்கு வாங்கப்பட்டுவரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இருமாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சத்து 35 ஆயிரம் வீட்டு மின் நுகர்வோருக்கு மாதத்திற்கு 27 ரூபாய் 50 காசுகள் மட்டுமே உயர்ந்துள்ளதாக டேன்ஜெட்கோ தெரிவித்துள்ளது.

வீட்டு உபயோக மின்சாரத்தில் 500 யூனிட் என்பது 501 யூனிட்டாக அதிகரிக்கும்போது அதற்கான மின்கட்டணத்தொகை 58.10% அதிகரித்து 1,786 ரூபாயாக வசூலிக்கப்பட்டதாகவும், இதேபோல 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின்நுகர்வோர் கூடுதலாக 656 ரூபாய் 60 காசுகள் செலுத்திவருவதாகவும் இந்த வேறுபாடுகள், தற்போதைய புதிய மின் கட்டணத்தில் முற்றிலுமாக களையப்பட்டுள்ளதாகவும் டேன்ஜெட்கோ தெரிவித்துள்ளது.

93% அதாவது 2 லட்சத்து 26 ஆயிரம் சிறு,குறுந்தொழில் மின்நுகர்வோருக்கு குறைந்த அளவாக யூனிட்டுக்கு 50 காசுகள் மட்டுமே உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 53 % அதாவது 19 லட்சத்து 28 ஆயிரம் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 50 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com