\
சாலையை ஆக்கிரமித்த காலாவதி மருந்துகள்

சாலையை ஆக்கிரமித்த காலாவதி மருந்துகள்

சாலையை ஆக்கிரமித்த காலாவதி மருந்துகள்
Published on: 

வந்தவாசி அருகே அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து மாத்திரைகள் சாலையில் வீசப்‌படுவதால் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அரசு மருத்துவமனையின் மருந்து, மாத்திரைகள் சாலை ஓரத்தில் கொட்டப்படுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மருத்துவமனை முறையாக செயல்படாததால் மருந்து, மாத்திரைகள் வீணாக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com