கோவையில் ரத்ததானம் வழங்கியவருக்கு காலாவதியான ஜூஸ்
கோவையில் ரத்ததானம் வழங்கியவருக்கு காலாவதியான ஜூஸ்web

ரத்த தானம் கொடுத்தவருக்கு காலாவதியான ஜூஸ்.. கோவை மருத்துவமனையில் அதிர்ச்சி!

கோவையில் பிரபல மருத்துவமனையில் ரத்த தானம் செய்த நபருக்கு காலாவதியான ஜூஸ் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on
Summary

கோவை அவிநாசியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ரத்த தானம் செய்த நபருக்கு காலாவதியான ஜூஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ரத்த தானம் செய்தவருக்கு காலாவதியான ஜூஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று கோவையில் பிரபல தனியார் மருத்துவமனைக்கு ரத்த தானம் செய்ய ஒருவர் வந்துள்ளார். ரத்ததானம் செய்தபிறகு அவருக்கு குடிக்க ஜூஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட ஜூஸ் பெட்டியை பெற்று பார்க்கும்போது, அந்த ஜூஸ் காலாவதியாகியிருந்தது தெரியவந்துள்ளது.

அதாவது ஜூஸின் காலாவதி தேதி12.08.2025 என்று இருந்துள்ளது. அதாவது ஜூஸ் காலாவதியாகி14 நாட்கள் கடந்து இருந்தது தெரியவந்து உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அந்த தானதாரர், நான் அந்த ஜூஸை அருந்திய பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தால், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற குறைந்தபட்சம் ரூ.50,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் ஏன் காலாவதியான ஜூஸை கொடுத்தீர்கள் என, நான் கேள்வி எழுப்பிய போது மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ரத்த தானம் செய்த நபர் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com