வெயில் இன்று பின்னும் : வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 111 டிகிரி வரை வெயில் கொளுத்தும் எனவும், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வேலூர், சேலம், திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கரூர், கடலூர் மற்றும் சென்னை மீனம்பாக்கம், திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசியது. வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி காணப்பட்டது. சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் அனல்காற்று தொடர்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெப்பம் பதிவாகலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.