\
மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன்

மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன்

மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன்
Published on: 

அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவினரிடையே உட்கட்சி பூசல் நிலவிவந்த நிலையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், ராஜவர்மனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவில் இருந்து விலகிய ராஜவர்மன், அமமுகவில் இணைந்தார். இந்நிலையில், அக்கட்சியில் இருந்து விலகிய அவர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com