“அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை உயர, அதிமுக ஆட்சிதான் காரணம்” - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

“எங்கள் ஆட்சியில்தான் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்பு கொண்டு வந்தோம்; 7.5 சதவீத இட ஒதுக்கீட்டையும் கொண்டு வந்ததோம். அவற்றினால்தான் இப்போது மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது” - முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
செங்கோட்டையன் - அன்பில் மகேஷ்
செங்கோட்டையன் - அன்பில் மகேஷ்PT Desk

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் கோடையையொட்டி பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் நீர் மோர் பந்தலை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அழுக்குளி பகுதியில் புதிய தார் சாலையை திறந்து வைத்த அவர், அழுக்குளி மற்றும் அயலூர் பகுதிகளில் தூய்மை பணிக்காக இலவச வாகன சேவையையும் துவக்கி வைத்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்PT Desk

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். செங்கோட்டையனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களை இங்கே காணலாம்...

“சி.ஏ.ஜி அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை மீது வைக்கப்பட்டிருக்க குற்றச்சாட்டுகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?”

“அன்றைய நிலையில் கொரோனோ தொற்று காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வர இயலவில்லை. இதுதான் பொருட்கள் வீணானதற்கு காரணம். மற்றபடி ஆடிட்டிங் பொறுத்தவரை, எந்தெந்த நிலையில் இருந்து எங்கெங்கு நிதிகள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறதென காட்டுகிறார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தெளிவாகவே செயல்பட்டிருக்கிறோம். அதற்கு மேல் இதில் விளக்கம் சொல்ல தேவை இல்லை”

செங்கோட்டையன்
செங்கோட்டையன்PT Desk

அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் பள்ளிக்கல்வித்துறை பொற்காலமாக அமைந்து இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

அமைச்சர் செங்கோட்டையன்

“அரசு பள்ளியில் 3 சதவீதம் வருகை குறைந்து உள்ளதாக கூறப்பட்டது பற்றி உங்கள் கருத்து என்ன?”

”புள்ளி விவரம் யாரிடம் இருக்கிறது என்பது தான் கேள்வி. 3 சதவீதம் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு  சென்று இருக்கிறார்கள் என்றால் எந்த புள்ளி விபரத்தை வைத்து கூறுகிறார்கள் என்பது எனது கேள்வி. இப்போது அவர்கள் சொல்வதுபோல 11 லட்சம் பேர் இணைந்து இருக்கிறார்கள் என்றால் அது அதிமுக அரசால் தான். ஏனெனில் எங்கள் ஆட்சியில்தான் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்பு கொண்டு வந்தோம்; 7.5 சதவீத இட ஒதுக்கீட்டையும் கொண்டு வந்ததோம். அவற்றினால்தான் இப்போது மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.

கொரோனாவிற்கு முன்பு ஒரு சதவீதம் பேர் என்ற அளவில்தான் தனியார் பள்ளிக்கு சென்றார்கள். நிலவிவரும் பொருளாதர நெருக்கடி காரணமாக, மீண்டும் அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் திரும்பி உள்ளனர். அரசு பள்ளிக்கு வந்தால் கட்டணம் இல்லை என்பதால் அவர்கள் அரசு பள்ளிக்கு வந்து கொண்டு இருக்கின்றனரே தவிர மாற்றம் எதுவும் இல்லை”

செங்கோட்டையன்
செங்கோட்டையன்PT Desk

“2017-18 கல்வி ஆண்டில் 60,000 லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், அதில் 7,000 லேப்டாப் மட்டும் வழங்கி உள்ளதாகவும், மீதமுள்ளவற்றை மாணவர்களுக்கு வழங்காமல் வைத்து இருந்ததால் பேட்டரி பழுது அடைந்து 80 கோடி ரூபாய் வீணாக செலவு ஆகி இருப்பதாக ஆடிட்டிங்கில் கூறி உள்ளனர். அதை எப்படி பார்க்கின்றீர்கள்?”

“ஆடிட்டங் என்பது புள்ளி விபரம் மட்டுமே. ஆடிட்டிங் என்பது ஒரு  கணக்கு. அந்த புள்ளி விபரத்தை கேள்வி கேட்க கூடாது”

“ஓபிஎஸ் மாநாட்டை பற்றிய உங்க கருத்து என்ன?”

“அதுபற்றி கருத்து கூற தேவையில்லை”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com