’மேகதாதுவில் அணைக் கட்டுவதை தடுப்பீர்’ - அதிமுக கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக 6 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது.
1. காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ் நாட்டிற்கான உரிமை காப்பீர். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதை தடுப்பீர் என தமிழக அரசை வலியுறுத்தல்
2. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துக. மக்கள் படும் துயரங்களை மனதிற்கொள்க என மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை.
3.பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றின் விலைகளை குறைப்பதாக கொடுத்த வாக்குறுதியை மாநில ஆட்சியாளர்கள் நிறைவேற்ற் வேண்டும்.
4. சட்டமன்ற பொதுத்தேர்தலின் வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவது பற்றி வாய்திறக்காத திமுக அரசுக்கு கண்டனம். வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்.
5.தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.
6.விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி விரயம் ஏற்படுவதற்கு காரணமான தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்.