’ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்’-டிஜிபி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு

’ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்’-டிஜிபி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு
’ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்’-டிஜிபி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு
Published on

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் சொத்துக்களை அபகரித்து கொலை செய்ய முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை சேர்ந்த பிரபாகரன் என்பவர், மணிமங்கலம் சேத்துப்பட்டை சேர்ந்த சசிகலா என்பவரை 2012 ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மயிலாப்பூரில் உள்ள காவல்துறை டிஜிபி அலுவலகம் முன்பு பிரபாகரன் இன்று குடும்பத்தோடு திடீரென தீக்குளிக்க முயன்றார். உடனடியாக டிஜிபி அலுவலக வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற காவல் துறையினர் பிரபாகரன் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து காப்பாற்றினர்.

பிரபாகரனிடம் விசாரணை செய்ததில் அவர் மனைவி சசிகலா மூலம் வரவேண்டிய சொத்துக்களை, சாதி மறுப்பு திருமணத்தை காரணம் காட்டி, மணிமங்கலம் சேத்துப்பட்டு ஊராட்சி மன்ற நிர்வாகிகள் வாசு மற்றும் சங்கர் ஆகியோரும், ரவுடி படப்பை குணாவுடன் சேர்ந்து சொத்துக்களை அபகரித்ததாக வடக்கு மண்டல ஐ ஜியிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீபெரும்பதூர் ஏ.எஸ்.பியிடமும் புகார் அளித்தும், எந்தப் புகாரின் மீதும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ரவுடி படப்பை குணா மற்றும் வாசு, சங்கர், பூபதி ஆகியோர் தன்னையும் தன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிருக்கு பயந்து இருப்பதால் தற்போது தனது இரண்டு குழந்தைகளோடு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார். அந்த ரவுடிகள் தன்னை எப்படியும் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், தன் உயிரை டிஜிபி அலுவலகம் முன்பு போகட்டும் என தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிஜிபி அலுவலகத்தில் பிரபாகரனின் புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com