
தமிழகத்தில் ஏழு இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
கீழடி, அதிச்சநல்லூர் , சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடுதுறை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இது மட்டுமன்றி தொல்லியல் துறைப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி அகழாய்வு செய்ததில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரக்கணக்கில் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
6ம் கட்ட அகழாய்வில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள், எடைகற்கள், பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மி குளவி, கொள்கலன்கள், உறை கிணறு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டது. கொந்தகையில் மேற்கோள்ளப்பட்ட ஆய்வில், ஒரு மனித எலும்புக் கூடுண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.