தமிழ்நாடு
கொற்கை அகழாய்வு பணி: சங்க காலத்தைச் சேர்ந்த 7 அடுக்கு செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு
கொற்கை அகழாய்வு பணி: சங்க காலத்தைச் சேர்ந்த 7 அடுக்கு செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு
கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கிய இந்த அகழாய்வு பணி தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கொற்கை ஊரின் மையப்பகுதியில் 17 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இன்றைய தினம் ஒரு குழியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் பயன்படுத்திய 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அதே குழியில் இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள், வாழ்விட பகுதிகளை உறுதிப்படுத்தும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதால் தொல்லியல் ஆய்வுப்பணிகள் சூடுபிடித்துள்ளது.